செஞ்சி: மேல்சித்தாமூர் மாரியம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடந்தது. செஞ்சி தாலுகா மேல்சித்தாமூர் குளக்கரையில் உள்ள மாரியம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 5.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, கோ பூஜை, இரண்டாம் கால பூஜையும், 9.15 மணிக்கு வேள்வி நிறைவும், பேரொளி வழிபாடும் நடந்தது. 9.30 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடும், 9.45 மணிக்கு திருக்குட நன்னீராட்டும் நடந்தது. தொடர்ந்து அன்னதானமும், பெருந்திருமஞ்சனமும் நடந்தது. இதில் ஏராளமான பொது மக் கள் கலந்து கொண்டனர்.