பதிவு செய்த நாள்
04
ஏப்
2017
10:04
சென்னை: ராமானுஜரின், ஆயிரமாவது ஆண்டு வைபவத்தை முன்னிட்டு, எம்பார் கைங்கர்ய டிரஸ்ட் சார்பில், 77 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 2.5 கிலோ தங்க குடம் சமர்ப்பிக்கப்படுகிறது. வைணவ ஆச்சாரியரான ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா, தமிழகம் முழுவதும் பரவலாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மதுரமங்கலத்தில் அவதரித்தவர் எம்பார். ராமானுஜருடன் உறுதுணையாக இருந்து, அவரின் எதிரிகள் சூழ்ச்சிகளில் இருந்து காப்பாற்றியவர்.ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, எம்பார் கைங்கர்ய டிரஸ்ட் சார்பில், 2.5 கிலோ தங்க குடம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு, 77 லட்சம் ரூபாய்.ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், நாளை காலை, 10:00 மணிக்கு நடக்க உள்ள மங்களாசாசனம் நிகழ்வின்போது, தங்க குடம் சமர்ப்பிக்கப்படுகிறது. மதியம், 1:00 மணிக்கு ராமானுஜருக்கும், எம்பாருக்கும் திருமஞ்சனம் நடக்கிறது. மாலை வீதி உலா நிகழ்வும், இரவு பிரியாவிடை நிகழ்வும் நடக்கிறது.