பதிவு செய்த நாள்
04
ஏப்
2017
12:04
பெத்தநாயக்கன்பாளையம்: பாலசுப்ரமணி கோவிலில் வரும், 9ல் திருவிழா நடக்கிறது. பெத்தநாயக்கன்பாளையம் அருகே, ஏ.குமாரபாளையம் பாலசுப்ரமணி கோவிலில், வரும், 9ல், பங்குனி உத்திர திருவிழா துவங்குகிறது. அதையொட்டி, 8 அன்று மாலை, 5:00 மணிக்கு, சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. 9 காலை, 10:30 மணிக்கு, ஆற்றுக்கு சென்று காவடி நிறை கட்டுதல் நடக்கும். மதியம், 1:30க்கு சிறப்பு பூஜை, அலகு குத்துதல், வேலு பம்பை கலைக்குழு சார்பில், காவடி ஆட்டத்துடன் ஊர்வலம் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு பூ ஜோடனை அலங்காரத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.