கோபி: கோபி பச்சமலை முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. மூலவருக்கு எதிரேயுள்ள கொடிமரம் முன்பு, வேதமந்திரம் முழங்க, அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்தனர். இதையடுத்து அரோகரா கோஷம் முழங்க கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து யாகசாலை பூஜை, சுவாமி திருவீதி உலா, அபி?ஷகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதனால் பச்சமலை முருகன் கோவில், நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.