பதிவு செய்த நாள்
04
ஏப்
2017
01:04
சாத்துார்;சாத்துாரில் கம்ம நாயுடு மகாஜன சங்கம் சார்பில் வெங்கடாசலபுரம் கம்ம மகாஜன டிரஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் யுகாதிவிழா நடைபெற்றது. சங்க தலைவர் எஸ்.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் வி.ராமமூர்த்தி வரவேற்றார். வெங்கடேஷ்வரா குரூப் பேப்பர் அன் போர்டு இயக்குனர் வெங்கட்ராமன் குத்து விளக்கேற்றினார். பெண்கள் பள்ளி தலைமையாசிரியர் பத்மாவதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவிகள் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடத்தினர். பகவத்கீதை ஸ்லோகம் கூறி மாணவர்கள் விளக்கம் அளித்தனர். சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லுாரி தாளாளர் ஆர்.சோலைசாமி, 10 மற்றும் பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவரகளுக்கு பரிசு வழங்கினார்.
ஒய்வு பேராசிரியர் கே.கோபால்சாமி இறைவணக்கம் பாடினார். கோவில்பட்டி அரசு பள்ளி தமிழாசிரியை என்.கெங்கம்மாள் பேசினார். சங்க பொருளாளர் கே.தாமோதரக்கண்ணன், சாத்துார் மெரிட் மேச்கம்பெனி உரிமையாளர் மெரிட் இ.பெருமாள்சாமி, சுப்பையா மேச்சர்ஸ் மெரிட்எஸ்.சுப்புராஜ், ராஜஸ்ரீ மேச் கம்பெனி எஸ்.பத்மநாபன், சித்தம்மாள் மேச்ஒர்க்ஸ் வி.ராஜேஸ்பெருமாள்,ஸ்ரீவாரு சிட்பண்ட் நிர்வாகி கே.வி.விஜயன், கேயார்டெக்ஸ்டைல்ஸ் கிருஷ்ணமூர்த்தி, வி.எஸ்.கண்ணன் லாரி சர்வீஸ் எஸ்.கந்தசாமி, ஸ்ரீலட்சுமிபிரிக்ஸ் கோ.தனசேகர், எல்.ஐ.சி., முகவர்கள் கே.ஹரிகரன், எஸ்.திருவேங்கடசாமி, என்.குருசாமி, ஸ்ரீகிருஷ்ணா பஸ் சர்வீஸ் கே.சுப்புராஜ், வக்கீல் பி.சரவணன், டாக்டர் தர்மராஜ்ராஜேஸ்வரி, திருமுருகன் சிட்பண்ட்ஸ் குருசாமி, ராஜ் ஐ கேர் அன் ஆப்டிக்கல்ஸ் கே.எஸ்.ராஜபாபு கலந்து கொண்டனர்.