கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ஏப்.15ல் ரசாயன கலவை பூச்சு பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2017 01:04
நாகர்கோவில்: ஜெர்மன் நாட்டு தொழில் நுட்பத்தில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும்பணி ஏப்.15-ம் தேதி தொடங்குகிறது. கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை 2000-ம் ஆண்டு ஜன.,1ல் திறக்கப்பட்டது. இந்த சிலை உப்புக்காற்றால் சிதிலமடையாமல் இருக்க மூன்று ஆண்டுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படும்.இந்த முறை ஜெர்மன் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புதிய ரசாயன கலவை பூச நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த கலவை 15 ஆண்டுகள் வரை சிலையை பாதுகாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக மாநில அரசு ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது.ஏப்.15ல் சிலையை சுற்றி சாரம் கட்டும் பணி தொடங்குகிறது. மூன்று மாதம் வரை இந்த பணிகள் நடைபெறும். கோடை விடுமுறையில் இந்த பணிகள் தொடங்குவதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை அருகில் சென்று பார்க்க முடியாத நிலை ஏற்படும்.