பதிவு செய்த நாள்
04
ஏப்
2017
01:04
அந்தியூர்: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில், நாளை தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டு, கடந்த, 16ல் நடந்தது. முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா நாளை (5ம் தேதி) நடக்கிறது. இதை தொடர்ந்து, 7ம் தேதி முதல், 10ம் தேதி வரை தேர்த்திருவிழா நடக்கவுள்ளது. குண்டம் விழாவைக் காணவும், பங்கேற்கவும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர். இதையடுத்து பக்தர்கள் பாதுகாப்புக்காக, 20 இடங்களில் தற்காலிகமாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தியூர் போலீசார் செய்துள்ளனர்.