Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநவமி: நன்மையும் செல்வமும் ... பழநி பங்குனி உத்திர விழா: கொடியேற்றத்துடன் துவக்கம் பழநி பங்குனி உத்திர விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

06 ஏப்
2017
11:04

காஞ்சிபுரம் : ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில், தேர் திருவிழா நேற்று, வெகு விமரிசையாக நடைபெற்றது. வாத்திய கருவிகள் முழங்க, உற்சவர் மற்றும் அம்மன், மக்கள் திரளில் பவனி வந்தனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழா, ஒரு வாரமாக நடந்து வருகிறது. இதில், நேற்று முன்தினம் வெள்ளித்தேரில் எழுந்தருளிய ஏகாம்பரநாதர் - ஏலவார்குழலி, பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி வீதியுலா வந்தனர். இந்த விழா நடந்தேறிய சமயத்தில், கச்சபேஸ்வரர் கோவில் முன், வாண வெடிகள் வெடித்து, இடமே கோலாகலமாக மாறியது. ஆயிரக்ககணக்கான பக்தர்கள், வாண வேடிக்கையை ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர்.

இதையடுத்து, ஏழாம் நாள் முக்கிய உற்சவமான நேற்று, தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. காலை, 5:30 மணிக்கு, ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி தேரில் எழுந்தருளினர். 8:15க்கு, நிலையில் இருந்த புறப்பட்ட தேரை, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். இந்த விழாவிற்காக வெளி மாவட்டத்தில் இருந்து பங்கேற்ற, 45 சிவன் பக்தர்கள், மங்கள் வாத்தியங்களை இசைத்தபடியும், கோலாட்டம் ஆடியபடியும் தேர்முன் சென்றனர். நான்கு ராஜவீதிகளிலும் பவனி வந்த தேர், மதியம், 1:45க்கு கோவிலை வந்தடைந்தது. இதையடுத்து, இரவு சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இன்று காலை, ஆறுமுகப் பெருமான் எடுப்பு ரத காட்சியில் அருள்பாலிப்பார். இரவு, குதிரை வாகனத்தில் எழுந்தருளும் ஏகாம்பரநாதர், ராஜவீதிகளில் பவனி வருவார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar