Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோதண்டராம பெருமாள் கோவில் வசந்த ... பொள்ளாச்சி கோவில்களில் ராமநவமி சிறப்பு பூஜை பொள்ளாச்சி கோவில்களில் ராமநவமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை பெய்ய வேண்டி கடலில் வருண ஜெபம்
எழுத்தின் அளவு:
மழை பெய்ய வேண்டி கடலில் வருண ஜெபம்

பதிவு செய்த நாள்

06 ஏப்
2017
12:04

ராமநாதபுரம், வறட்சி நீங்கி மழை பெய்ய வேண்டி சேதுக்கரை கடலில் வருண ஜெபம் நடந்தது. தமிழகத்தில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் வறட்சி நிலவுகிறது. கண்மாய், குளம், ஊரணிகள் வறண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலை நீங்க வேண்டியும், மழை பெய்ய வேண்டியும் ராம நவமியை முன்னிட்டு திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடலில் வருண ஜெபம் நடந்தது. இதை முன்னிட்டு சேதுக்கரை சேது பந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று காலை 9:55 மணிக்கு சிறப்பு யாகம் நடந்தது. விநாயகர், முருகன், ராமருக்கு வெண் கடுகு, நாயுருவி, தேன், நெய், பழங்கள், கடுக்காய், அரசு, ஆல் உள்பட 9 மரக்குச்சிகள், நவதானியங்கள், சர்க்கரை, நெல், அரிசி, காசு உள்பட 108 வகை பொருட்கள் போடப்பட்டு யாக பூஜை நடந்தது.

வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தம் கடலில் கலக்கப்பட்டு ராமஜெய மந்திரம் முழங்கப்பட்டது. திருப்புல்லாணி பாலாஜி யாகத்தை நடத்தினார். இதையடுத்து, ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திருப்புல்லாணி, சேதுக்கரை சேது பந்தன யாத்ரா வைதீக சங்க நிர்வாகிகள் மணிகண்டன், அபிராம் உள்பட பலர் செய்தனர். ராமநாதபுரம் அரண்மனை வாசல் பால ஆஞ்ச நேயர் கோயில், குயவன்குடி ஷீர்டி சாய்பாபா ஆலயத்தில் ராம நவமி விழா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar