பதிவு செய்த நாள்
06
ஏப்
2017
12:04
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் உள்ள ராமர், பெருமாள் கோவில்களில், ராமநவமி சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ஷீரடி சாய்பாபா கோவிலில், ராமநவமி சிறப்பு விழாவையொட்டி நேற்று ேஹாமம், காகட ஆரத்தி, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சாய் ஜெயந்தியின் இன்னிசையும், சீதாலட்சுமி சீனிவாசன், இந்திரா ஆகியோர் உபன்யாசமும், நடந்தது. மதியம், 1:00 மணி முதல் அன்னதானம், மாலை, 5:00 மணிக்கு குழந்தைகள் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. அனுப்பர்பாளையம் பூமிநீளா சமேத மலைதாண்டி பெருமாள் கோவிலில், ராமநவமி பெருவிழா, ராமர்பட்டாபிேஷகம், சுயம்பு வீர ஆஞ்சநேயருக்கு 16 வகையான அபிேஷகங்களும், ஆராதனையும் நடந்தது. மலைதாண்டிய பெருமானின் உலகளந்த திருவடி பாதத்திற்கு சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடந்தது. பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவில், பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில், கோவை ரோடு ஆஞ்சநேயர் கோவில்களில் ராமநவமி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார வழிபாடும், சிறப்பு பூஜைகளும், ஆன்மிக சொற்பொழிவும் இடம்பெற்றன.