பதிவு செய்த நாள்
06
ஏப்
2017
02:04
அருப்புக்கோட்டை: முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கலை முன்னிட்டு, பக்தி பரவசத்துடன் பூக்குழியில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. எட்டாம் நாள் விழாவாக பக்தர்கள் அக்கினி சட்டி, 51, 101, சட்டிகள், முதுகில் அலகு குத்தி தேர், நீண்ட அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். இன்று(ஏப் 6ல்)அதிகாலையில், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூக்குழியில் இறங்கினர். பெண்களும் பூக்குழியில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். சுமார் 100 க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் பக்தர்கள் பூக்குழியில் இறங்கினர். ஏற்பாடுகளை எஸ்.பி.கே., கல்வி குழும தலைவர் சுதாகர் தலைமையில், விழாக் குழுவினர் செய்தனர்.