சதுரகிரியில் உண்டியல் திறப்பு : ரூ.20 லட்சம் காணிக்கை வசூல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2017 02:04
வத்திராயிருப்பு: சதுரகிரி மலைக் கோயிலில் நடந்த உண்டியல் திறப்பில் ரூ. 20 லட்சம் காணிக்கை வசூலானது.சுந்தரமகாலிங்கசுவாமி கோயிலில் ரூ.17 லட்சம், 9 கிராம் தங்கம், 10 கிராம் வெள்ளி, சந்தனமகாலிங்கசுவாமி கோயிலில் ரூ.2.30 லட்சம் வசூலானது. மதுரை அறநிலையத்துறை துணை ஆணையர் செல்லத்துரை, ஆய்வாளர் பாலலட்சுமி, செயல் அலுவலர் குருஜோதி முன்னிலையில் எண்ணிக்கை நடந்தது. பணம் மூடைகளாக கட்டப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மலை அடிவாரம் கொண்டு வரப்பட்டது.