பதிவு செய்த நாள்
06
ஏப்
2017
03:04
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், ராம நவமி உற்சவம் கோலாகலமாக நடந்தது. குமாரபாளையத்தில், ராம நவமி உற்சவம் ராமர் கோவில், பாண்டுரங்கர், புருஷோத்தமபெருமாள், லட்சுமி நாராயண சுவாமி உள்ளிட்ட கோவில்களில் நடந்தது. இதை முன்னிட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பாண்டுரங்கர் கோவிலில் வரும், 14 வரை அபிஷேக, ஆராதனை; வரும், 15 மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண வைபவம்; 16 காலை ஆஞ்சநேயர் வீதி உலா, மாலை பாண்டுரங்கர் வீதி உலா நடக்கிறது. நாள்தோறும் மாலை, பஜனை நடைபெறும். தட்டான்குட்டை புருஷோத்தம பெருமாள், லட்சுமி நாராயண சுவாமி உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் ராம நவமி சிறப்பாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.