பதிவு செய்த நாள்
07
ஏப்
2017
02:04
பொன்னேரி: பொன்னேரி, திருவேங்கிடபுரத்தில், நாளை சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பொன்னேரி, திருவேங்கிடபுரம் கிராமவாசிகள் சார்பில், தசரதன் நகர் பூங்காவில், இரண்டு ஆண்டுகளாக சீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடந்து வருகிறது. மூன்றாம் ஆண்டு திருக்கல்யாண வைபவரம் நாளை மாலை, 5:00 மணிக்கு, பொன்னியம்மன் கோவிலில் இருந்து, சீர்வரிசை கொண்டு வருதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
நிகழ்ச்சிகள் விபரம்
நேரம் நிகழ்ச்சி
மாலை 5:30 மணி குழந்தைகளின் மாறுவேட நிகழ்ச்சி மற்றும் பரத நாட்டியம்
மாலை 6:00 மணி ஒய்யாளி, மாலை மாற்றுதல், பூப்பந்து
மாலை 7:00 மணி சங்கல்பம்
மாலை 7:30 மணி மாங்கல்ய பூஜை, ஓமம் வளர்த்தல்
இரவு 7:50 மணி திருக்கல்யாணம்
இரவு 8:00 மணி பூர்ணாஹூதி
இரவு 8:15 மணி தீப ஆராதனை, தீர்த்த பிரசாதம்
இரவு 8:45 மணி திருக்கல்யாண விருந்து.