பதிவு செய்த நாள்
07
ஏப்
2017
02:04
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், வரும், 14ம் தேதி, தமிழ் புத்தாண்டையொட்டி, 1,008 பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு தரிசனம் நடக்கிறது. திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு விழா, வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், வரும், 14ம் தேதி, தமிழ் புத்தாண்டையொட்டி, 1,008 பால்குட ஊர்வலம் நடக்கிறது. நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள, கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில் இருந்து, 1,008 பால்குட ஊர்வலம் புறப்பட்டு, ஆறுமுக சுவாமி கோவில் தெரு, பெரிய தெரு, ஜோதிசாமி தெரு வழியாக மலை கோவிலில் உள்ள, காவடி மண்டபத்தில் சென்றடைகிறது. தொடர்ந்து, உற்சவர் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில், தங்கத்தேரில் எழுந்தருளி, மாடவீதியில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதே போல், மத்தூர், மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலிலும், 1,008 பால்குட அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.