திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2017 10:04
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் சமேத பத்மாஸனித்தாயாருக்கு பங்குனி பிரமோத்ஸவத்தை முன்னிட்டு 6ம் நாளில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. காலையில் உற்சவருக்கு விஷேச திருமஞ்சனம், சாற்றுமுறை, கோஷ்டி பாராயணங்கள் செய்யப்பட்டது. மாலை 7:00 மணிக்கு யானை வாகனத்தில் கல்யாண ஜெகநாதப்பெருமாள் வீதியுலா வந்தார். பெண்கள் சீர்வரிசைத்தட்டு, மலர்கள், வாசனைத்திரவியங்கள், வஸ்திரங்களுடன் பின்தொடர்ந்தனர். இரவு 7:45 மணிக்கு பத்மாஸனித்தாய்-கல்யாண ஜெகநாதருக்கு திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களை பாடினர். திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தாம்பூல பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.