பழநி பங்குனி உத்திர பெருவிழா: அலகு குத்திய பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2017 11:04
பழநி: பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக் காவடியுடன் பழநியில் குவிந்துள்ளனர். அவ்வாறு வருவோர் சரவணப் பொய்கை, பாதவிநாயகர் கோயில்அருகே அலகு குத்தியும், பலவகை காவடிகள், கரும்பு தொட்டில் துாக்கியும் கிரிவீதியை வலம்வந்து மலைக்கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
நாளை பங்குனி உத்திர தேரோட்டத்தை முன்னிட்டு, கிரிவீதியில் வாகனங்கள் செல்லதடை விதிக்கப்பட்டு, படிப்பாதை, யானைப்பாதை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. பழநி முருகன்கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் இன்று இரவு திருஆவினன்குடி கோயில் அருகே திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். மாலை 4.30 மணிக்கு நான்கு கிரிவீதிகளிலும் தேரோட்டம் நடக்கிறது. கூட்ட நெரிசலை தடுக்க பக்தர்கள் குடமுழுக்கு அரங்கம் வழியாக யானைப்பாதையில் மலைக்கோயிலுக்கு செல்லவும், தரிசனம் முடிந்தபின் படிப்பாதை வழியாக கீழே இறங்கவும், அவ்வழிகள் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அனுமதிச் சீட்டுள்ள வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. கிரிவீதி, படிப்பாதை, யானைப்பாதை பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.