திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2017 11:04
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்- சவுந்தரநாயகிஅம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. இங்கு கடந்த மாதம் 31ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. முன்னதாக அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். காலை 10:00 மணிக்கு அம்மன் சார்பாக சதீஷ் பட்டரும், சுவாமி சார்பாக அசோக் பட்டரும் மாலை மாற்றி கொண்டனர். காலை 10:15 மணிக்கு திருக்கல்யாணம் நடந்து. திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு அம்மனுக்கும் சுவாமிக்கும் தீபாராதனை காட்டப்பட்டு,தொடர்ந்துஅன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டம் இன்று காலை 9:00 மணிக்கு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் செந்தில், செந்தில் பட்டர், கண்ணன் பட்டர், சாமிகண்ணு பட்டர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.