பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
04:04
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த பங்குனி உத்திர விழா திருக்கல்யாணத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சுவாமிக்கு நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி, அதிகாலை நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. காலை, 10:00 மணிக்கு, மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் உற்சவ மூர்த்திகள், சுவாமி சன்னதி அருகில் உள்ள தங்க கொடி மரம் எதிரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, இரவு, 11:00 மணிக்கு, உற்சவ மூர்த்திகளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதையடுத்து, சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.