பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
04:04
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, கம்பத்து இளையனார் சன்னதியில், 1,008 பால் குடம் ஊர்வலம் நடந்தது.அருணகிரிநாதருக்கு காட்சி அளித்த தலமான, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள கம்பத்து இளையனார் சன்னதியில், பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நேற்று
நடந்தது. தொடர்ந்து, முருக பக்தர்கள் நேர்த்திக் கடனாக, பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என, பல்வேறு வகையான, 1,008 காவடிகளை ஏந்தியவாறு, மாட வீதியில் வலம் வந்து
வழிபட்டனர். இதையொட்டி, அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன.