மரக்காணம்: ஆலத்தூர் கிராமத்தில் பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. மரக்காணம் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடுகுடுப்பைகாரர்கள் உள்ளனர். இவர்களின் குலதெய்வமான பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 7ந்தேதி சக்தி கரகம் எடுத்தல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மன் பூ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 8ந்தேதி காலை 7.00 மணிக்கு பாலமுருகன், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக ஆராதனையும், 8.30 மணிக்கு மழைவேண்டி வர்ணபகவானுக்கு சிறப்பு யாகத்தை, முருக்கேரி சீனுவாச சுவாமி குழுவினர் செய்துவைத்தனர். நேற்று காலை 10.00 மணிக்கு பால்குடம், காவடி, ஆகாயமாலை, மிளகாய் தூள் அபிஷேகம், செடல் போடுதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மன் பூ அலங்காரத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.