கண்டாச்சிபுரம்: சக்திவேல்முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.கண்டாச்சிபுரம் வெற்றிவேல் குன்றம் சக்திவேல் முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்திருவிழா நடைபெற்றது.காலை 7.00 மணிக்கு மூலவர் சக்திவேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து சக்திவேல் ஊர்வலம் நடைபெற்றது. பிற்பகல் 12:30 மணியளவில் மாவிடித்தல்,மழு அடித்தல் மற்றும் மிளகாய்பொடி அபிஷேகம் நடந்தது. பின்னர் காவடிகளுக்கு சிறப்பு பூஜைகளும்,நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்களுக்கு வேல் அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.பின்னர் சக்திவேல் முருகன் தேர் வீதியுலா நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடியுடன் ஊர்வலமாக வந்தனர். இரவு உற்சவ மூர்த்திசக்திவேல் முருகன் வீதியுலா நடைபெற்றது.