விழுப்புரம்: விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு இந்திரா நகர் பாலமுருகன் கோவிலில்,32வது ஆண்டு காவடி உற்சவம் நடந்தது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, காலை 7.00 மணிக்கு பாலமுருகனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பின்னர், 8.00 மணிக்கு பம்பை, உடுக்கையோடு பக்தர்கள் காவடி ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். 9.00 மணிக்கு முருகருக்கு சிறப்பு தீபாராதனையும், 9.30 மணிக்கு பாலமுருகன் விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.