புதுப்பட்டி மாரியம்மன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது ராசிபுரம் புதுப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று கோலாகலமாக தொடங்கியது. ராசிபுரம் அடுத்த, புதுப்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள மாரியம்மனை, பவனியில் ஏற்றி சீராப்பள்ளி ஈஸ்வரன் கோவிலில் இருந்து, சீராப்பள்ளி சாலை வழியாக வடுகம் வந்தது. வடுகத்தின் முக்கிய வீதி வழியாக வந்த அம்மன், மக்களுக்கு காட்சியளித்த பின், புதுப்பட்டியில் உள்ள சன்னிதானத்திற்குச் சென்றது. பின், வடுகம் பெருமாள் கோவிலில் நடந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, தீ மிதித்தனர். பக்தர் ஒருவர், முதுகில் அலகு குத்தி அதனுடன் கயிற்றை காரில் கட்டி இழுத்து வந்தது பக்தர்களை பரவசப்படுத்தியது. வரும் 12ல், புதுப்பட்டி மாரியம்மன் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.