பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
05:04
கிறிஸ்தவர்கள் வழிபாடு நாமக்கல் மாவட்டம் முழுவதும், ஆலயங்களில் நடந்த
குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனையில், ஏராளமான கிறிஸ்தவர்கள் வழிபாடு செய்தனர். உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், இயேசு உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர்
பண்டிகையாகவும், அதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை, குருத்தோலை ஞாயிறாகவும் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத்தில், பங்கு தந்தை பிரான்சிஸ் தலைமையில், குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது. ஆலயத்தில் புறப்பட்டு, போலீஸ் ஸ்டேஷன், துறையூர் சாலை வழியாகச் சென்று மீண்டும், ஆலயத்தை அடைந்தனர். தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, இறைவனின் ஆசீர் பெற்றனர். அதேபோல், மோகனூர் செல்வநாயகியம்மாள் ஆலயம், பேட்டப்பாளையம் புனித செசீலியம்மாள் ஆலயம், சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரம் புனித அந்தோணியார் ஆலயம் என, மாவட்டம்
முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில், குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.