பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
06:04
மல்லசமுத்திரம்: வையப்பமலையில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. திருச்செங்கோடு தாலுகா, எலச்சி பாளையம் அடுத்த, வையப்பமலையில், ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தின்போது, தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். கடந்த, 5ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. கடந்த, 8 இரவு, 9:00 மணி முதல், 12:00 மணி வரை
சுவாமிக்கு திருக்கல்யாணமும், சுவாமி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வீதி உலாவும் நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு விநாயகர் தேரும், மாலை, 4:00 மணிக்கு பாலசுப்ரமணியசுவாமி
தேரையும், மலையை சுற்றி அரோகரா கோஷம் முழங்க பொதுமக்கள் வடம்பிடித்து இழுத்தனர். 6:00 மணிக்கு தேர்நிலை அடைந்தது. திருவிழாவை முன்னிட்டு, நேற்று சுவாமி வெள்ளிக்
கவசத்தில் காட்சியளித்தார்.