பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
05:04
தேர்த்திருவிழாவில் நரசிம்மர், ரங்கநாதர் சுவாமி திருக்கல்யாண
உற்சவம் பக்தர்கள் பங்கேற்பு நாமக்கல் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நரசிம்மர் மற்றும் ரங்க நாதர் சுவாமி திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடந்தது.நாமக்கல்லில், பிரசித்தி பெற்ற நரசிம்மர் சுவாமி, நாமகிரி தாயார் கோவில் உள்ளது. ஒரே கல்லால் உருவான, நாமக்கல்
மலைக்கோட்டையின் கிழக்குப் புறத்தில், அரங்கநாயகி தாயாரோடு அரங்கநாதர் கோவிலும், மேற்குப் புறத்தில் நாமகிரி தாயார் சமேத நரசிம்ம சுவாமி கோவிலும், குடவரை கோவிலாக அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி தேர்த்திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 2ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலை சிறப்பு அபிஷேகம், மாலை வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. நேற்று, நரசிம்மர் கோவில் வளாகத்தில்,
நரசிம்மர் நாமகிரி தாயார் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடந்தது. அதேபோல் ரங்கநாதர், ரங்கநாயகி தாயார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.