பதிவு செய்த நாள்
11
ஏப்
2017
02:04
சேலம்: சேலம், கோட்டை பெருமாள் கோவிலில், ராமநவமி உற்சவத்தையொட்டி, நேற்று சிறப்பு பூஜை நடந்தது. ராமநவமியையொட்டி, கோட்டை பெருமாள் கோவிலில் நேற்று
அதிகாலை, 6:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை, மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர், கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. வரும், 14,15 ஆகிய இரண்டு நாட்களுக்கு மூலவர் பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், உற்சவர் ராமர் ஆகியோருக்கு முத்தங்கி அலங்காரம் சாத்துபடி செய்யப்படுகிறது. ஏப்., 15 காலை, 10:30
மணிக்கு ஆஞ்சநேயருக்கு விசேஷ அபிஷேக ஆராதனை மற்றும் வடமாலை, வெள்ளி கவச அலங்காரம், மாலை, 6:00 மணிக்கு சிறப்பு பஜனை நடக்கிறது. மாலை, 7:00 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் திருவீதி உலா நடக்கிறது.