பனமரத்துப்பட்டி: வேங்காம்பட்டியில், பூவாயம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மல்லூர், வேங்காம்பட்டியில் பிரசித்தி பெற்ற பூவாயம்மன் கோவில் உள்ளது. கடந்த, 6ல் பூசாட்டுதலுடன் விழா துவங்கியது. இன்று காலை பொங்கல் வைத்தல், மாலை, 100க்கும் மேற்பட்ட மாடுகளுடன் எருதாட்டம், இரவு அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை அக்னி கரகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 14 அன்று மாலை, 6:00 மணிக்கு, வேங்கை நண்பர்கள் குழு சார்பில், நடிகை லட்சுமிராய் பங்கேற்கும், நட்சத்திர கலை நிகழ்ச்சி நடக்கிறது.