சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம்
பதிவு செய்த நாள்
29
ஜன 2026 01:01
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற நந்தனார் கோவில் மற்றும் சவுந்தரநாயகி சமேத சிவலோகநாதர் கோவிலில், சுவாமி சகஜானந்தா சமாதி உள்ளது. இங்கு, 32 ஆண்டுகளுக்குப்பின், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இந்த வழிபாடு கடந்த, 25 ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அடுத்தடுத்த தினங்களில், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமங்களுடன் யாகசாலை பூஜை, திருமுறை பாராயணம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடந்தன. நேற்று, அதிகாலை யாகபூஜை, நாடி சந்தானம், தீபாராதனை நடந்தது. யாக சாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு ஊர்வலமாக சென்று காலை 9:30 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் கோவில் விமான கலசங்களுக்கு, சிவாச்சாரியார்கள் கும்பநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது, ஏற்பாடுகளை நந்தனார் கல்வி கழக தலைவர் மணிரத்தினம், செயலாளர் திருவாசகம், பொருளாளர் ஜெயச்சந்திரன், ஆலோசகர் தெய்வநாயகம், மட நிர்வாகக்குழு செயலர் வினோபா, நிர்வாகிகள் சங்கரன், பன்னீர்செல்வம், கமல் மணிரத்தினம், அரவிந்த் மணிரத்தினம், கஜேந்திரன் உள்ளிட்டோர் செய்துள்ளனர். நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சிவானந்தம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணி செய்தனர்.
|