பதிவு செய்த நாள்
07
நவ
2011
11:11
கோவை : பல்லடம், கோம்பக்காடுபுதூரில் உள்ள சின்ன அய்யன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. பல்லடம், இச்சிப்பட்டி, கோம்பக்காடுபுதூரில் உள்ளது சின்ன அய்யன் கோவில். இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை 5.00 மணிக்கு விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. நேற்று மதியம் 1.00 மணிக்கு சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தங்கள், முளைப்பாலிகை ஊர்வலமும், மாலை 5.00 மணிக்கு முதற்கால யாகபூஜையும் நடந்தன. இன்று காலை 8.00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையும், மதியம் 12.00 மணிக்கு மூலிகை பொருட்கள் யாகம், நிறைவேள்வி, தீபாராதனையும், மாலை 5.00 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜையும், மாலை 6.00 மணிக்கு கோபுர கலசம் வைத்தலும், இரவு 8.00 மணிக்கு மூலிகை பொருட்கள் வேள்வி, நிறைவேள்வியை தொடர்ந்து அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் நடக்கின்றன. நாளை அதிகாலை 4.30 மணிக்கு நான்காம் கால யாகபூஜையும், யாத்ரா தானமும் காலை 5.30 மணிக்கு கலசங்கள் கோவில் வலம் வருதலும் நடக்கிறது. காலை 6.00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள், சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள் மற்றும் உதகையாதீனம் மருதாசல அடிகள் ஆகியோர் முன்னிலையில் ராஜகோபுரம், விநாயகர், முருகன், சின்ன அய்யன், நவக்கிரகங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.