திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறப்புமிக்க தலங்களில் ஒன்று பாபநாசநாதர் திருக்கோயில். அகஸ்திய மாமுனிவருக்கு திருமணக் கோலம் காட்டிய ÷க்ஷத்திரம் இது. அம்பிகையின் திருப்பெயர் விமலை என்ற உலக நாயகி. ஆனால் பவள வெண்நகையாள் எனும் அழகிய தமிழ்ப் பெயரும் இந்த அம்பிகைக்கு உண்டு. இங்குள்ள மற்றொரு சிறப்பம்சம் இரட்டை பைரவர் தரிசனம். அம்பிகைக்கும் இரட்டை பைரவர்களுக்கும் தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் கலந்துகொண்டு அம்மையை வழிபட ஆனந்த வாழ்வு பெறலாம்.