சென்னை: பல்லாவரம் அடுத்த திருநீர்மலை ரங்கதாத பெருமாள் கோயிலில் சித்திரை பெருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது. சென்னை, பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் உள்ள ரங்கநாதர் கோவில் 2 ஆயிரம் ஆண்டு பழமையானது. இக்கோயிலில் சித்திரை பெருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. திருநீர்மலையை சுற்றி உள்ள 4 மாட வீதிகள் வழியாக தேர் சுற்றிவந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.