திருநெல்வேலி வள்ளியூரில் இருந்து சுமார் 13 கி.மீ. தூரத்தில் உள்ளது மகாராஜேஸ்வரர் திருக்கோயில். இங்குள்ள மூலவர் இடது காலை மடித்து, வலது காலை தொங்கவிட்டபடி, கையில் வேலுடன் காட்சி தருகிறார். கோயிலில் தளவாய் மாடசாமி, பேச்சியம்மன் ஆகியோரையும் தரிசிக்கலாம். குழந்தை வரம், திருமண பாக்கியம் வேண்டுவோர், வேண்டுதல் நிறைவேறியதும் தொட்டில் கட்டியும், வளையல்கள் சமர்ப்பித்தும் வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர். இந்த மூலவரை முதல் நாள் இரவில் தங்கியிருந்து மறுநாள் காலையில் தரிசிப்பது மிகவும் விசேஷம்.