கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தல வாடி மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு புதிதாக தங்க முலாம் பூசப்பட்ட தங்கத்தகடு வாங்கப்பட்டது. அதை, அம்மன் விக்கரத்திற்கு நேற்று முன்தினம் இரவு சாத்தி, சிறப்பு அபிஷே கம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சிக்கு, லாலாப்பேட்டை, மகிளிப்பட்டி, மேலசிந்தலவாடி பகுதிகளை சேர்ந்த, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.