Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்னுார் கரன்சியில் அம்மன் கோவில் ... புட்டபர்த்தி சாய்பாபா ஸித்தி தினம்: மகா சமாதியில் பஞ்சமித்ர கீர்த்தனை புட்டபர்த்தி சாய்பாபா ஸித்தி தினம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னுார் மாரியம்மன் திருவிழா: ஆதிவாசிகளின் உலக்கை ஆட்டம்!
எழுத்தின் அளவு:
குன்னுார் மாரியம்மன் திருவிழா: ஆதிவாசிகளின் உலக்கை ஆட்டம்!

பதிவு செய்த நாள்

24 ஏப்
2017
01:04

குன்னுார்: குன்னுாரில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவில், திருநங்கையர் ஆடிய அட்டப்பாடி ஆதிவாசிகளின் உலக்கையாட்டம், அவர்களின் திறனை பறை சாற்றுவதாக இருந்தது. குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில் தேர்திருவிழா நடந்து வருகிறது. இதில், பல்வேறு கலாசார கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.  இதன் ஒருபகுதியாக குன்னுாரில் நடந்த முத்துப்பல்லக்கு நிகழ்ச்சியில், கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த சிலம்பொலி குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அதில், சோனா என்பவர் தலைமையில், கிச்சு, ஷஜின், ஷகீர், அணு, சுதே ஆகிய திருநங்கையர் நிகழ்த்திய  கலாசார நடனம் பார்வையாளர்களை வியப்படைய வைத்தது. அதிலும், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி ஆதிவாசிகளின் உலக்கையாட்டம் அனைவரையும் கவர்ந்தது.

எழுத்தாளர், போலீஸ் பணி போன்று பல்வேறு களங்களிலும் சாதிக்கும் திருநங்கையர், கலை நிகழ்ச்சிகளிலும் சாதனை புரிந்து வருவது குறித்து கேட்டபோது, சிலம்பொலி குழுவில் உள்ள சோனா, கூறியதாவது: கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து, எங்கள் குழுவினர் அனைவரும், பல சிறிய குழுக்களாக பிரிந்து, சித்திரை மாதங்களில், பல்வேறு இடங்களில் நடக்கும்,  கலாசார நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறோம். ஒரு முறை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடிக்கு சென்ற போது, அங்கு கண்ட ஆதிவாசி மக்களின் கலாச்சார நடனம் எங்களை மிகவும் கவர்ந்தது. அந்த நடனங்களை பழகி அவற்றில், பிரதானமான  உலக்கையாட்டத்தை குன்னுாரில் அரங்கேற்றினோம். நாங்கள் பிற இடங்களில் பழகிய நடனங்களை, அட்டப்பாடியில் உள்ள ஆதிவாசி மாணவ, மாணவியருக்கு சொல்லி கொடுத்துள்ளோம்.  

நாங்கள் ‘டிவி’யில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை விட, நேரடியாக தெருக்களில் நடக்கும் திருவிழாக்களில் பங்கேற்கும் போது,  மக்கள் நேரடியாக வந்து எங்களை பாராட்டுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அரசு சார்பில் எங்களுக்கு எந்த உதவிகளும் கிடைக்கவில்லை என்றாலும், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கிடைக்கும் தொகையில், அலங்காரத்திற்கும், உடைக்கான செல்வு போக, மீதமுள்ள தொகையில் கவுரவமாக வாழ்க்கை நடத்தி வருகிறோம். இவ்வாறு, சோனா கூறினார். கலை நிகழ்ச்சிகளை போலவே, ஆங்கிலம், தமிழ், மலையாளம் என பல மொழிகளிலும் சர்வசாதாரணமாக பேசி கலக்கிய இவர்களை, திருவிழாவுக்கு வந்த அனைவரும் பாராட்டி சென்றது, திருநங்கையர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar