Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடசேரி கோவில் திருவிழாவில் ... அகத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியாயி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பெரியாயி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

26 ஏப்
2017
11:04

ஊத்துக்கோட்டை: பெரியாயி அம்மன் கோவிலில், மூன்றாம் ஆண்டு, மயான கொள்ளை விழா, யாக பூஜை, காப்பு கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக துவங்கியது. ஊத்துக்கோட்டை அடுத்த , எல்லம்பேட்டை கிராமத்தில் உள்ளது, அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பெரியாயி அம்மன் கோவில். ஊத்துக்கோட்டை – பெரியபாளையம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள இக்கோவிலில், அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில், சிறப்பு பூஜை நடை பெறும். இங்கு அம்மனை வழிபடச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து,  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். சித்திரை மாத அமாவாசை தினத்தை ஒட்டி, நேற்று, மூன்றாம் ஆண்டு மயான கொள்ளை நிகழ்ச்சி  கோலாகலமாக துவங்கியது. ஐந்து நாட்கள் நடை பெற உள்ள இந்நிகழ்ச்சியின் முதலாம் நாளான நேற்று, காலை , 8:00 மணிக்கு, யாக  பூஜை, கொடியேற்றம், காப்பு கட்டுதல் ஆகியவற்றுடன் துவங்கியது. மாலை , 4:00 ம ணிக்கு, புறக் கூடை, சக்தி கரகம், தீச்சட்டி எடுத்தல்,  அலகு போடுதல், அம்மன் வீதிஉலா ஆகிய நிகழ்ச்சிகளும், இரவு, 9:00 ம ணிக்கு நிசாசன்னி வதமும் நடந்தது. இரண்டாம் நாளான இன்று,  புதன்கிழமை, காலை , 6:30 ம ணிக்கு அம்மனுக்கு நலங்கு வைத்தல், சீர்வரிசை எடுத்தல், காலை 9:00 ம ணிக்கு, மயான கொள்ளை சூறை யிடுதல், வெள்ளாளகண்டி அழித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளன. இரவு, 9:00 மணிக்கு அம்மன் வர்ணிப்பு, இரவு, 9:30 ம ணிக்கு, கும்ப படையல் நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபடுவர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar