பதிவு செய்த நாள்
27
ஏப்
2017
02:04
கோவை : திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்கசெல்லும், பக்தர்களின் வசதிக்காக, ஆர்.எஸ்.புரம், மேற்கு மண்டல தலைமை தபால் நிலையத்தில், டிக்கெட் முன்பதிவு செய்யும்
திட்டம், நேற்று துவங்கியது.
இதில், 30 பேர், சிறப்பு தரிசனத்துக்கு, டிக்கெட் பெற்றனர். மேற்கு மண்டல தபால்துறை தலைவர் சாரதா கூறுகையில், திருப்பதி தேவஸ்தானத்தின் ஒப்புதல் பேரில், வெங்கடாசலபதியை தரிசிக்க, சிறப்பு நுழைவு டிக்கெட், வினியோகிக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.காலை 10:00 முதல், மதியம் 1:00 மணி வரை, நான்கு பிரிவுகளாக, கவுன்டர்களில் டிக்கெட் விற்கப்படும். ஒரு நுழைவு டிக்கெட் விலை, 300 ரூபாய். பார்கோடு முறையில் டிக்கெட் அளிக்கப்படுவதோடு, பயணம் செய்ய திட்டமிடும், 56 நாட்களுக்கு முன்பே பதிவு செய்தால் மட்டுமே, தரிசனம் செய்யலாம், என்றார்