பதிவு செய்த நாள்
27
ஏப்
2017
02:04
குறிச்சி : போத்தனூர், செட்டிபாளையம் ரோட்டிலுள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.
செட்டிபாளையம் ரோடு, சின்ன ரேடியோ ஸ்டேஷன் அருகே, கிருஷ்ணா நகரிலுள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா, கடந்த, 24ம் தேதி கணபதி ஹோமத்துடன்
துவங்கியது. அன்று மாலை, கம்பம் நடுதல், பூசசாட்டுதல் நடந்தன. நேற்று அதிகாலை, அன்பு நகர் முத்துமாரியம்மன் கோவிலிலிருந்து சக்தி கரகம் அழைத்து வருதலும், மதியம்
அன்னதானமும் நடந்தன.
மாலையில், மாவிளக்கு பூஜை, திருக்கல்யாணமும் தொடர்ந்து விருந்தும் நடந்தன. இன்று அதிகாலை, பொங்கல் விழாவும், மாலை அம்மன் திருவீதி உலாவும் நடக்கின்றன. நாளை காலை மறுபூஜை மற்றும் மகா அபிஷேக அலங்காரத்துடன் விழா
நிறைவடைகிறது.