பதிவு செய்த நாள்
28
ஏப்
2017
12:04
திருப்பூர்: கோவையில் உள்ளது போல் திருப்பூர் தபால் நிலையத்திலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கான தரிசன நுழைவுச்சீட்டு விற்பனையை துவக்க வேண்டும் என்று, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தான சிறப்பு தரிசன நுழைவுச்சீட்டு, தபால் நிலையங்கள் வாயிலாக விற்பனை செய்யும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
கோவையில், ஆர்.எஸ்., புரத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில், நேற்று முன்தினம் முதல், திருப்பதி தேவஸ்தான சிறப்பு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது; தலா, 300 ரூபாய் என்ற அடிப்படையில், ஒரு நபர், ஆறு சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். நுழைவுச்சீட்டை, 56 நாட்களுக்கு முன்னதாக தபால்துறை மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். காலை, 10:00 மணி முதல், 11:00 வரை; மதியம், 12:00 மணி முதல், 1:00 மணி
வரை, திருப்பதிக்கு நுழைவுச்சீட்டு விற்பனை செய்யப்படுகிறது.திருப்பூரில் இருந்து ரயில் மற்றும் பஸ்கள் மூலம், தினமும் திருமலை திருப்பதி கோவிலுக்கு ஏராளமானோர்
சென்று வருகின்றனர். ஸ்ரீ வாரி டிரஸ்ட் மற்றும் இணையதளம் மூலம், முன்பதிவு செய்கின்றனர். திருப்பூர் பகுதி மக்களின் நலன் கருதி, கோவையை போல், திருப்பூர் தபால் அலுவலகத்திலும், திருப்பதி கோவிலுக்கான நுழைவுச்சீட்டை விற்பனை செய்ய
வேண்டும் என்று, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.