Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாரியூர் கொண்டத்துகாளியம்மன் ... திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி கோயில்களில் ராமானுஜர் 1000 ஆண்டு ஜெயந்தி உற்சவ விழா
எழுத்தின் அளவு:
பரமக்குடி கோயில்களில் ராமானுஜர் 1000 ஆண்டு ஜெயந்தி உற்சவ விழா

பதிவு செய்த நாள்

02 மே
2017
12:05

பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி உற்சவம் நடந்தது. ராமானுஜர் சித்திரை மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில் 1017ம் ஆண்டு பூமியில் அவதரித்தவர். இவர் அனைத்து மக்களும் சுவாமியின் திருவடியைஅடைய வேண்டும் என்ற நோக்கில் ‘ஓம் நமோ நாராயணா’ என்ற எட்டெழுத்து  மந்திரந்தை உபதேசித்துள்ளார். இவரது ஆயிராமாவது திரு அவதார உற்சவம் பரமக்குடி பெருமாள் கோயில்களில் கொண்டாடப்பட்டது.

பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் காலை 8:00 மணி முதல் அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, 108 கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு யாகபூஜைகள்,மகாபூர்ணாகுதி நடந்தது.  சுந்தரராஜப் பெருமாளுக்கும், ராமானுஜருக்கும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.  பின்னர் 11:00 மணிக்கு திருநாமம், சங்கு, கரம், கருட, அனுமன் கொடி முன் செல்ல,ராமானுஜர் எதிர்சேவை சாதித்த படி பெருமாள் முத்துப்பந்தல் வாகனத்தில் வீதி வலம் வந்தார்.  எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலிலும் ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை வரதராஜப் பெருமாள், ராமானுஜர் வீதிவலம் வந்தனர்.

கீழக்கரை:  திருப்புல்லாணி ஆதிஜெகநாதபெருமாள் கோயிலில் ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழா நடந்தது. காலை 9 மணியளவில் உற்சவர் ராமானுஜருக்கு விசேஷ திருமஞ்சனம், சாற்று முறை கோஷ்டி பாராயணங்கள் செய்யப்பட்டது. நாலாயிர திவ்ய பிரபந்தப்பாடல்கள் பாடியவாறு மங்களா சாசனம் நடந்தது. மாலை 6:00 மணியளவில் உற்சவர் ராமானுஜர் பல்லக்கில் வீதியுலா வந்தார்.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

சிக்கல்: கொத்தங்குளம் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி சமேத சுந்தரராஜப்பெருமாள் கோயிலில், ராமானுஜருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ராமானுஜர் இயற்றிய சரணாகதி கத்யம், வைகுண்ட, ஸ்ரீரங்க பாடல்கள் பாடப்பட்டன. ஏற்பாடுகளை ஸ்ரீ ராம பக்தசபா தலைவர் நாராயணன், செயலர் சத்தியமூர்த்தி, மாதவ பட்டர் ஆகியோர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar