திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள திருத்தலம் பொன்விளைந்த களத்தூர், இங்கு அருள்பாலிக்கும் ராமபிரான் சதுர்புஜங்களுடன் காட்சி தருகிறார். அதேபோல் பத்ராசலத்தில் அருள்புரியும் ராமபிரானும் நான்கு திருக்கரங்களுடன் திகழ்கிறார். அம்பு, வில், சங்கு, சக்கரம் தாங்கியிருக்கிறார் இந்த ராமன். இதிலும் ஒரு விசேஷம் உண்டு. வழக்கமாக சங்கு, சக்கரங்கள் முறையே பெருமாளின் இடக்கரத்திலும் வலக்கரத்திலுமாகத் திகழும், ஆனால், இந்தத் தலத்தில் ராமனின் இடக்கரத்தில் சக்கரமும், வலக்கரத்தில் சங்கும் திகழ்வது சிறப்பம்சமாகும்!