கேரள மாநிலம், மலப்பரும் மாவட்டம் ஆலத்தியூரில் அருள்பாலிக்கும் அனுமனுக்கு அவல் நைவேத்தியம் செய்யப்படுகிறது. சீதையைத் தேடிப் புறப்பட்ட அனுமனுக்குப் பசியாற ராமர் அவல் கொடுத்து அனுப்பினாராம். இதன் காரணமாகவே இக்கோயிலில் அருள்பாலிக்கும் அனுமனுக்கு அவல் நைவேத்தியம் செய்யப்படுகிறது. அனுமனுக்கு அவல் நைவேத்தியம் செய்து வழிபட்டால் வேண்டு வரம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.