திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த காட்டுப்புத்தூர் அருகில் நாகையநல்லூரில் உள்ள ராமர் கோயிலில் நடைபெறும் ராமநவமி உத்ஸவம் மிகவும் விசேஷம். இந்த விசேஷத்தன்று நடைபெறும் ராமர் சீதா திருக்கல்யாணத்தின் முடிவில் பக்தர்களுக்கு தலை வாழை இலை போட்டு விருந்து படைக்கிறார்கள். விருந்து முடிந்ததும் சாப்பிட்ட இலையை பக்தர்கள் யாரும் மூடமாட்டார்கள். காரணம், அதில் புரண்டு எழுந்தால் நினைத்த காரியங்கள் யாவும் தடையின்றி நடைபெறும். பாவங்கள் நசிந்து புண்ணியம் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.