பதிவு செய்த நாள்
09
நவ
2011
10:11
ஆனைமலை : பொள்ளாச்சி அடுத்துள்ள நெடும்பாறை மாகாளியம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்தது. பொள்ளாச்சி கோபாலபுரம் அடுத்த நெடும்பாறையில் உள்ள பழமையான மாகாளியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, விநாயகர், பாலமுருகன் சுவாமிகளுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 6ம் தேதி விக்னேஸ்வர பூஜை, மூலாலயத்தில் உள்ள சக்தியை கும்பத்தில் எழுந்தருள செய்தல், முதல்கால யாக வேள்வி, மூர்த்திகளுக்கு அபிஷேகம், மூலவருக்கு பிரதிஷ்டை நடந்தன. 7ம் தேதி இரண்டாம் கால யாக வேள்வி, விமான கும்பாபிஷேகம், விநாயகர், மாகாளியம்மன், பாலமுருகன் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, விழாக் குழுவினர் மேற்கொண்டனர்.