பதிவு செய்த நாள்
09
நவ
2011
10:11
ஈரோடு: ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா சென்னிமலை அருகே முகாசிப்பிடாரியூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள காமாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழாவும், திருமண மண்டப திறப்பு விழாவும், வரும் 13ம் தேதி நடக்கிறது. இன்று மாலை 6 முதல் 7 மணிவரை விக்னேஸ்வர பூஜை, கர்த்தா அனுக்ஞை மற்றும் தீபாராதனை நடக்கிறது. நாளை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, நவ., 11ல் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தீபாராதனை, அன்று காலை 10.31க்கு தீர்த்தம் எடுக்க புறப்படுதல், மாலை கும்ப ஸ்தாபனம், கலாகர்ஷணம், முதற்கால யாக பூஜை நடக்கிறது.நவ., 12ம் தேதி இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜை, மாலை 7 மணிக்கு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம் சாற்றுதல் நடக்கிறது.நவ., 13 அதிகாலை 5 மணிக்கு காமாட்சி அம்மன் திருமண மண்டபம் திறப்பு விழா நடக்கிறது. காலை 7.30 மணிக்கு கலசம் புறப்பாடு, காலை 9 மணிக்கு அரசமர விநாயகருக்கு மஹா கும்பாபிஷேகம், 9.25 கலசங்கள் புறப்பாடு, காலை 9.55 மணிக்கு காமாட்சி அம்மன் விமானத்துக்கு மஹா கும்பாபிஷேகமும், காலை 10 மணிக்கு காமாட்சி அம்மனுக்கு மஹாõபிஷேகமும் நடக்கிறது. காலை 10.15 மணிக்கு மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல், மாலை 4 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.