சித்ரா பவுர்ணமி அன்று நீர் நிலைகளிலும் அதன் கரைகளிலும் மக்கள் கூடுவது வழக்கம் ஆற்றங்கரையில் ஊற்று தோண்டி, நீரெடுத்து அங்கு தீர்த்தவாரிக்கு வரும் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வார்கள். அன்றிரவு ஆற்றங்கரைகளுக்குச் சென்று நிலாச்சோறு சாப்பிடும் வழக்கம் இன்றும் சில இடங்களில் வழக்கத்தில் இருந்து வருகிறது.