திருக்குற்றால மலையில் உற்பத்தியாகும். அருவிக்கு சித்ரா நதி என்று பெயர். சித்ரா பவுர்ணமி அன்று இந்த நதியில் நீராடுவது புண்ணியச் செயலாகக் கருதப்படுகிறது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருக்குளத்தில் ஒரு சித்ரா பவுர்ணமியன்று பொன்னாலான தாமரையை மலரச் செய்து அதனை எடுத்து வரவழைத்து இந்திரன் சொக்கேசரை பூஜித்ததாகச் சொல்லப்படுகிறது. இன்றும் அந்த சிவலிங்கத்தை வழிபடும் பொருட்டு சித்ரா பவுர்ணமி அன்று தேவேந்திரன் மதுரைக்கு வருவதாக ஐதிகம்.