திருவல்லத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. விஸ்வநாத ஈஸ்வரர் அருள்பாலிக்கும் கஞ்சன் மலை. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்தில் சித்திரா பவுர்ணமியன்று இரவு 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் வடதிசையில் ஜோதி தெரிகிறது. முதலில் 3 அடி உயரத்திலும், பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாகி 18 அடி உயரம் வரையும் தெரியும். அந்த ஜோதி, பின்னர் மறைந்து விடுவது அதிசயம்!