பாவங்களைப் போக்கி பக்தர்களைக் காத்திடும் பஞ்ச நரசிம்ம தலங்கள் ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ளது. மங்களகிரி, வேதாத்ரி, மட்டப்பல்லி, வாடப்பல்லி, கேதவரம் எனப்படும் இவை நாராயணனின் பரம், வியூகம், விபவம், ஹார்த்தம், அர்ச்சை என்ற ஐந்து நிலைகளையும் காட்டும் அற்புதமான தலங்களாகும்.